தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த சி.வி.சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ-க்களை எடப்பாடி பழனிசாமி பதவி நீக்கம் செய்துள்ளார். இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய நத்தம் விஸ்வநாதன், "யாராக இருந்தாலும் நீக்குவதே இவருக்குப் பழக்கமாகிவிட்டது; கடைசியில் மறதிவாக்கில் அவரையே கட்சியிலிருந்து நீக்கி ஒருநாள் அறிவிப்பார்" எனக் கிண்டலாகக் கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த மோதலால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
நன்றி: பாலிமர்