சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற வாகனக் கண்காட்சியில் டாடா நிறுவனத்தின் மின்சார பேருந்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிமுகம் செய்துவைத்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் விற்பனையாகும் 40% எலெக்ட்ரிக் கார்கள், 70% எலெக்ட்ரிக் பைக்குகள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுபவை. 150 கி.மீ-க்கு இடையில் சார்ஜிங் மையங்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என பெருமிதம் கொண்டார்.