வெறிபிடித்த, குணப்படுத்த முடியாத அல்லது உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள கொடூர தெருநாய்களைச் சட்டப்படி கருணைக் கொலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏபிசி விதிகள் 2023-ன் படி கால்நடை நிபுணர்களின் ஆய்வுக்குப் பின்பே இந்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாய்களை அகற்றக் கோரி கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவை மாற்றக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் விக்ரம் நாத் அமர்வு இன்று இத்தீர்ப்பை வழங்கியது.