டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் இன்று (பிப்.7) தொடங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. கொல்கத்தாவில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. நாளை (பிப்.8) கொழும்புவில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில், இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஈஷன் மலிங்கா தோள்பட்டை காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.