ஆபத்தை உணராமல் யானையுடன் செல்பி - வீடியோ வைரல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. யானைகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி சாலையை கடந்து செல்வது வழக்கம். சில யானைகள் சாலையில் உலா வருவது தொடர்கதையாகி விட்டது. இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை தாளவாடி அருகே ரோட்டில் நின்று கொண்டு இருந்தது.

அந்த வழியாக வாகனத்தில் வந்த இளைஞர்கள் யானை நிற்பதை கண்டு ஆபத்தை உணராமல் யானை அருகில் நின்று செல்பி, ரீல்ஸ் வீடியோ எடுத்தனர். இதைக் கண்ட மற்ற வாகன ஒட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த காட்சியை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அது தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனப்பகுதி சாலையோரமாக உலா வரும் யானை போன்ற வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் செல்போன் மூலம் படம் எடுக்கக் கூடாது என வனத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சுற்றுலா பயணிகள் இதைக் கண்டு கொள்வதில்லை எனத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி