தங்ககொடியும், அவரது கணவரும், சிக்கரசம்பாளையத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். பச்சிராஜ், நேற்று முன்தினம்(செப்.25) காலையில் 6 மணிக்கு வழக்கம் போல் தோட்டத்துக்கு சென்று விட்டார். மீண்டும் அவர் நேற்று(செப்.25) காலை 9 மணி அளவில் வீட்டுக்கு திரும்பி வந்த போது மனைவி தங்ககொடி வாந்தி எடுத்தவாறு இருந்துள்ளார்.
அது குறித்து, பச்சிராஜ் கேட்டபோது, மகனுக்கும் திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது, எனக்கும் உடல்நிலை சரி இல்லை, அதனால் பூச்சி மருந்தை குடித்து விட்டேன் எனக் கூறியுள்ளார். பச்சிசிராஜ் மனைவியை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தங்ககொடிக்கு உடல்நிலை மேலும் மோசம் அடைந்துள்ளது. இதையடுத்து அவரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்க கொடி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.