ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திகனாரையில் ஸ்ரீசாரதா என்பவரது விவசாய நிலத்தில் யானைகளிடம் இருந்து பாதுகாக்க அகழிகள் வெட்டப்பட்டது. இதில் பாறைகளை உடைப்பதற்காக ஓசூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(45) என்பவர் அனுமதியின்றி சட்டவிரோதமாக 100 குழிகளை துளையிட்டு வெடிபொருட்களுடன் வெடிப்பதற்கு தயார் செய்துகொண்டிருந்தார்.
ரகசிய தகவல் அறிந்து விரைந்த தாளவாடி காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் விவசாய நிலத்தின் உரிமையாளர் ஸ்ரீசாரதா, கிருஷ்ணமூர்த்தியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மூன்று நபர்கள் வெடி மருந்து பொருட்களுடன் பிடிபட்டுள்ளதால் தாளவாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.