ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையம் முதல் நிலைபேரூராட்சியில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' நிகழ்ச்சியில், சேர்மன் மகேஸ்வரி செந்தில்நாதன், வைஸ் பிரசிடெண்ட் பழனிசாமி, செயல் அலுவலர் பிரபாகரன் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டனர். பெறப்பட்ட மனுக்களின் தீர்வாக, சத்தியமங்கலம் தெற்கு மின் அலுவலகத்தின் பெயர் மாற்ற ஆணை பயனாளிகளுக்கு உதவி மின் பொறியாளர் கார்த்திக் வழங்கினார். ஆண்கள், பெண்கள் ஆர்வமுடன் தங்களது மனுக்களைத் துறைவாரியாகப் பதிவு செய்து கலந்து கொண்டனர்.