ஈரோடு: குழியில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த வாலிபர் பலி

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகநாதன், பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உறவினரைப் பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மேட்டுப்புதூர் ஊராட்சிப் பகுதியில், முறையான தடுப்புகள் இல்லாததால் தோண்டப்பட்ட குழியில் யோகநாதன் மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி