இதையடுத்து அங்கு சென்ற கணவர் செல்வம், மனைவி சுமதியை பவானியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றார். பின்னர் உயர் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுமதியை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். விசாரணையில், அவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பாம்பு கடித்து இறந்து விட்டதாக தெரியவந்தது. இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி