ஈரோடு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் நீர் மோர் பந்தல்

அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட மாணவர் அணியின் சார்பில் மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி ஏற்பாட்டில் ஈரோடு அசோகபுரம் 16வது சாலையில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொது மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் மாநகர் மாவட்ட கழக செயலாளருமான கே.வி. ராமலிங்கம், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தொடர்ந்து பொது மக்களுக்கு மோர், தர்ப்பூசணி, இளநீர் உள்ளிட்டவைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி