சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு 30 நாட்கள் அவகாசம் போதாது என்றும், பணியை முடிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜய மனோகரன் கோரிக்கை விடுத்துள்ளார். பீகாரில் அவசர அவசரமாக இப்பணி செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் விடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். வருவாய் துறை அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பும் இப்பணியை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் போதிய கால அவகாசம் வழங்க மறுப்பதாக அவர் தெரிவித்தார். தகுதியுள்ள வாக்காளர்கள் யாரும் விடுபடாத நிலையை உறுதி செய்ய கூடுதல் அவகாசம் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.