இந்த ஆலயத்தின் நுழைவு வாசலில் உலகிலேயே மிக உயரமான 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட பைரவர் சிலை உள்ளது. இந்த ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் மூலவராக உள்ள சொர்ணலிங்க பைரவருக்கு பக்தர்களே பூஜைகள் செய்யலாம் என்பது தனிச்சிறப்பு. இன்று தேய்பிறை அஷ்டமி தினம் முன்னிட்டு கால பைரவ ஆலயத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காலை முதல் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கொடைக்கானலில் சுற்றிப்பார்க்க கட்டணம் இல்லை