நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

ஈரோடு மாநகரில் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இதில், 2ம் கட்டமாக நேற்று (அக் 3) கருங்கல்பாளையம் காந்தி சிலை முதல் காளைமாட்டு சிலை வரை (காவேரி சாலை, ஆர்கேவி சாலை, காந்திஜி சாலை) உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் போலீசார் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

மாநகராட்சி கழிவு நீர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளின் படிகட்டுகள், சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளின் மேற்கூரை, விளம்பர பதாகைகள், நடைபாதை ஆக்கிரமிப்புகள் ஜேசிபி வாகனம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி