ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் பகுதியில், இரவு 10:15 மணிக்கு ஒரு டீக்கடையை மூடச் சொல்லி, அங்கு வேலை செய்யும் வட இந்திய ஊழியரை காவல் நிலையத்தில் பணிபுரியும் மோகன் குமார் என்ற போலீஸ்காரர் அடித்து மிரட்டியுள்ளார். கடை உரிமையாளர் வெளியே சென்றிருப்பதாக ஊழியர் கூறியும் கேட்காமல், சைக்கோ போல அவர் ஊழியரை தாக்கியுள்ளார். இரவு 11 மணி வரை கடைகள் திறக்க அனுமதி இருந்தும், போலீஸ்காரர் ஊழியரை தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.