பெருந்துறை: வாழைத் தோட்டத்தில் பெண் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு

பெருந்துறை அடுத்த நல்லமுத்தாம்பாளையத்தைச் சேர்ந்த வாழை இலை வியாபாரி கோபாலகிருஷ்ணன். இவருக்கு அதேப் பகுதியில் வாழைத் தோட்டம் உள்ளது. இந்நிலையில், கோபாலகிருஷ்ணன் தோட்டத்திற்குச் சென்றுள்ளார். 

அங்கு உடல் அழுகி துர்நாற்றம் வீசிய நிலையில், ஒரு பெண் உடல் ஒன்று கிடந்துள்ளது. பெருந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அப்பெண் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ரூபாஜோதி மண்டல் என்பவருடைய மனைவி சிபானி தாஸ் மோண்டல் (38) என்பதும், கடந்த 6 ஆண்டுகளாக பெருந்துறை அருகேயுள்ள பணிக்கம்பாளையத்தில் தங்கி கூலி வேலை (கட்டிடத்தொழில்) செய்து வந்ததும் தெரியவந்தது. 

இதனையடுத்து அவரை கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொல்கத்தாவைச் சேர்ந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதிகப்பணம் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி சிபானி தாஸ் மோண்டலை நல்லமுத்தாம்பாளையத்திற்கு அழைத்துச் சென்று அந்த இருவரும் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அப்போது சிபானி தாஸ் அணிந்திருந்த தங்க வளையல்களையும், செல்போனையும் இரு வாலிபர்களும் பறிக்க முயன்றபோது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சிபானி தாஸ் மோண்டலின் கழுத்தை நெரித்து கொன்றதுதெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி