ஈரோடு: காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதம்.. வடமாநில வாலிபர் தற்கொலை

உத்திரபிரதேசம் மாநிலம் சாயில் தரியப்பூரை சேர்ந்த ராம் கிருஷ்ணா மகன் லோக்நாத் (21). திருமணம் ஆகாதவர். இவர், ஈரோடு மாவட்டம் நம்பியூர் கோசனம் கே. மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மில்லில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த 1-ம் தேதி மதியம் லோக்நாத் அவர் காதலிக்கும் பெண்ணுடன் போனில் நீண்ட நேரம் பேசி வாக்குவாதம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று மில் வளாகத்தில் உள்ள கழிப்பறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி