தமிழகத்தில் அதிமுக, பா. ஜ. க, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஒத்த கருத்து உள்ள கட்சிகள் என வலுவான கூட்டணியாக செயல்பட தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் ஏற்படுத்தும் நிலை ஏற்படுத்த வேண்டும் என்று தொண்டர்கள் களப் பணியை தொடங்கி உள்ளார்கள். அது ஆட்சி மாற்றம் தேவை என்று நினைக்கும் புதிய கட்சிகள் மற்றும் பழைய கட்சிகள் இருந்தாலும் சரி ஒத்த கருத்தோடு இணைந்து ஆட்சி மாற்றம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளாக உள்ளது.
தமிழகத்தின் மக்களின் மனநிலை தி. மு. க அரசின் நான்காண்டு வேதனையான சாதனையாக என்பது நினைத்துப் பார்க்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக உள்ளதாகவும், மென்மேலும் மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றும் அரசாக இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. உண்மையிலே மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் மக்கள் விரோத அரசாக செயல்படுவது வெளிவந்துள்ளது. அதனால் தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் தங்களது வாக்குகளை ஆட்சி மாற்றத்திற்கு மாற்றி அமைக்க தயாராக இருக்கிறார்கள். அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி கூட்டணியாக தமிழகத்தில் அமையும்.