ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க, மாவட்ட எஸ்.பி. ஜவஹர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசார், அசோகபுரம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள டீக்கடை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த, அதேப்பகுதியைச் சேர்ந்த உசேன் அலி (29) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.