கேளராவில் இருந்து பெங்களூர் நோக்கி சொகுசு பேருந்து ஒன்று நேற்று வந்துக் கொண்டிருந்தது. இப்பேருந்தை கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சதீஸ்குமார் (51) என்பவர் ஓட்டி வந்தார்.
நேற்று அதிகாலை 3. 45 மணிக்கு, கோவை, சேலம் தேசிய நெடுஞ்சாலையில், ஈரோடு அடுத்த குன்னத்தூர் அருகே, முன்னே சென்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை, சொகுசு பேருந்து ஓட்டுனர் சதீஸ்குமார் முந்திச் செல்ல முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பேருந்து, இடது புறமாக இருக்கும் சர்வீஸ் ரோட்டில் திரும்புவதற்கு பதிலாக, சாலையோரமாக இருந்த மண் திட்டின் மீது ஏறி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 2 பெண்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர். 12 பேர் லேசான காயமடைந்த நிலையில், பெருந்துறை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் அனுமதிக் கபட்டுள்ளனர்.