குன்னத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனையில் குன்னத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பொது மக்களின் எதிர்கால நலனை கருதி 15- வது நிதி 2022- 2023 மற்றும் 2023 -2024 சுகாதார மானிய திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டிடப் பணிகளில் மேல் தளம் காங்கிரீட் அமைக்கும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் போது உதவி பொறியாளர் பர்வீன், குன்னத்தூர் பேரூராட்சி தலைவர் கொமரசாமி, வார்டு கவுன்சிலர்கள் சரண்பிரபு, கார்த்திகேயன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.