அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தீவிர வாக்கு சேகரிப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டத்தின் பெருந்துறை தொகுதியில் தேர்தல் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஊத்துக்குளி பகுதியில் முன்னாள் அமைச்சர் K.C. கருப்பணன் MLA. தலைமையில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. அப்போது, 3 சிலிண்டர்கள் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து வசதி, 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துதல், அனைவருக்கும் வீடு, மகளிருக்கு இருசக்கர வாகன மானியம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டன. பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் J.K. ஜெயக்குமார் MLA. மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி