அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கியாஸ் சிலிண்டரிலும் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. உடனடியாக ஈரமான சாக்குகளை போட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து தீப்பிடித்த கியாஸ் சிலிண்டரை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக வெளியே கொண்டுவந்தனர். குடியிருப்புகள் அதிகமான இடத்தில் உள்ள டீக்கடையில் தீ பற்றிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்லும் நிதியமைச்சர் மரிய வில்சன்