போலீசார் அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில், அந்த பாட்டில்களில் போலியான ரசாயன கலர் பவுடரை கலந்து, பிராந்தியை போல் தயார் செய்து, அதை அரசு மது பாட்டில்களில் அடைத்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த மது வழக்கத்துக்கு மாறாக விஷ நெடியுடன் இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் போலி மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ஈரோடு, சத்தி ரோடு, கொத்துக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (54) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ. 700 மதிப்பிலான 5 போலி மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.