ஈரோடு பெரியசேமூரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (53). மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர், அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து தனது மனைவி பாண்டியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர், மது அருந்துவதை கைவிடுவதற்காக, மாரியப்பன் சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். ஆனால், சரிசெய்ய முடியாததால், கடும் மன உளைச்சலில் இருந்து வந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பாண்டியம்மாள் அளித்த புகாரின் பேரில், ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.