சட்ட ஆலோசகர் ஏ. முத்துசாமி, முன்னாள் தலைவர் எம். துரைசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். அதைத்தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
அனைவரும் பயன்படும் வகையில் ஈரோட்டில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும். சிவப்பு வண்ண பிரிவில் இருக்கும் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலை ஆரஞ்சு வண்ண பிரிவாக மாற்றி வழங்க மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆவன செய்ய வேண்டும்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அலுவலகத்தில் இருந்து தொழிற்சாலையை ஆய்வு செய்து, பிறகு அறிவுறுத்தப்பட்டால் அதை சரிசெய்து கொள்ள 15 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் இணைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் வழங்கும்போது, தொழிற்சாலைகளில் மின்சாரம் அவகாசம் இல்லாமல் நிரந்தரமாக வழங்க வேண்டும் என்பன உள்பட பலவேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.