ஈரோடு: தமிழகமுதல்வர் மற்றும் அமைச்சருக்கு சென்னிமலை விவசாயிகள் நன்றி

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சமீபகாலமாக தெருநாய்கள் ஆடு, கோழிகளை கடித்து குதறி கொன்றது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் இழப்பீடு வழங்கக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்ததுடன், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தெருநாய்கள் கால்நடைகளை கடித்து கொன்றால், ஆட்டுக்கு ரூ. 6 ஆயிரமும், கோழிக்கு ரூ. 200-ம் இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்தநிலையில் ஈரோடு பெரியார்நகரில் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். 

அப்போது, தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடத்த நடவடிக்கை, தெருநாய்களில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பாக கண்காணிப்பது குறித்து பேசினார். தொடர்ந்து, இழப்பீடு பெற்றுக்கொடுக்க உதவியாக இருந்த அமைச்சர் முத்துசாமிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். இதில் ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தெருநாய்கள் கடித்து குதறியதில் கால்நடைகள் உயிரிழந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்கு அறிந்து வைத்திருந்தார்.

தொடர்புடைய செய்தி