ஈரோடு: 11 ம் தேதி முதல்வர் வருகை; கருப்புக்கொடி எதிர்ப்பு போராட்டம்

பெருந்துறை சிப்காட் பகுதியின் முக்கிய மூன்று பிரச்சினைகளுக்கு வரும் 10 தேதிக்குள் தீர்வு காணாவிட்டால் 11 ம் தேதி வருகை தரும் தமிழக முதல்வருக்கு கருப்பு கொடியுடன் பாதிக்கப்பட்ட நிலத்தடி கையில் வைத்து எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் பெருந்துறை சிப்காட் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன் அடிக்கல் நாட்டினார் இருந்தபோதிலும் இதற்கான அரசாணையோ வேலையோ இதுவரை தொடங்கப்படவில்லை. சிப்காட் தொடர்பாக போராட்டம் நடத்திய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது கடுமையான பிரிவுகளில் பதியப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். 

சிப்காட் அமைப்பதற்காக நிலங்களை இழந்த விவசாயிகள் இதுவரை உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை அதனை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை வரும் 10 தேதிக்குள் தீர்வு காண வேண்டுமென அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இக்கூட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பெருந்துறை சட்டமன்ற பொறுப்பாளர் ராயல் கே. சரவணன் ஒருங்கிணைத்தார். அதிமுக, திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பொது நல அமைப்பினரும் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி