ஈரோடு: திமுகவின் குற்றச்சாட்டுக்கு பாஜக வானதி சீனிவாசன் விளக்கம்

ஈரோடு வேப்பம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்த அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டத்தில் வடதமிழிக ஆர்எஸ்எஸ் செயலாளர் ஜெகதீசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச் ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டம் இன்று நிறைவடைந்த நிலையில் வெளியே வந்தபோது பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்
விகடன் மேடையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திமுக பேசியது என்பது அவரோடு அரசியல், அதே நேரத்தில் விஜயை திமுக அமைச்சர்கள் தரக்குறைவாக விமர்சனம் செய்வது என்பது பார்த்தால் திமுக என்றும் தரம் தாழ்ந்த விமர்சனம் தான் செய்யும் என்றார். மக்களோடு பிரச்சினை கவனிக்க திமுக அரசுக்கு மனம் இல்லை, வெள்ள நிவாரணம் நிதி குறிப்பிட்ட அலகு அடிப்படையில் மத்திய அரசு கொடுக்க கூடிய ஒன்று, மத்திய அரசு எந்த மாநிலத்திற்கு பேரிடர் நிதி வழங்குவதில் வஞ்சனை இல்லை மாநில அரசு கொடுக்கும் புள்ளிகள் அடிப்படையில் நிவாரணம் கொடுக்கபடுகிறது என கூறினார்.

தொடர்புடைய செய்தி