ஆசனூர்: கர்நாடக மது கடத்தி வந்தவர் கைது

ஈரோடு மாவட்டத்தில் எல்லைப் பகுதியான ஆசனூர் வழியாக, கர்நாடக மது கடத்தி வருவதை தடுக்கும் வகையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கோபி மதுவிலக்கு போலீசார் ஆசனூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மதுபாட்டில், 3 மது பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த சத்தியமங்கலம் கோனமலையைச் சேர்ந்த சவுதீசை (21) கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி