ஈரோடு மாவட்டத்தில் அதிரடி சோதனை

ஈரோடு மாவட்டத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறிவைத்தே கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள், சாக்லேட் வடிவிலான போதைப் பொருட்கள் மட்டுமல்லாமல், திரவ வடிவில் மெத்தனால், எத்தனால் மூலம் என பல்வேறு வகைகளில் போதைப் பொருட்களின் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனைத் தடுக்கும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட கெமிக்கல் கடைகளில் மெத்தனால், எத்தனால் சால்வண்ட் ஆகியவை அனுமதி இல்லாமல் விற்பனை செய்யப்படுவது குறித்து சோதனை நடைபெற்றது. 

ஈரோட்டில் உள்ள கெமிக்கல் கடைகளில் மதுவிலக்குப் பிரிவு மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மெத்தனால், எத்தனால் சால்வண்ட் ஆகியவற்றின் அனுமதி பெற்று விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் அதனை வாங்கிச் செல்லுபவர்களின் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் அனுமதி இல்லாமல் மெத்தனால், எத்தனால் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறினார்கள்.

தொடர்புடைய செய்தி