இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த ரூ. 2,000 மதிப்பிலான 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதேபோல், ஈரோடு வடக்கு போலீசார், கனிராவுத்தர்குளம், காந்திநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வீரப்பன்சத்திரம், கொத்துக்காரர்தோட்டத்தைச் சேர்ந்த கோகுலநாத் (24), அசோகபுரம், நேருவீதியைச் சேர்ந்த சந்திரபிரகாஷ் (25) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த ரூ. 7,000 மதிப்பிலான 700 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்கள் அளித்த தகவலின்பேரில், இதில் தொடர்புடைய ஈ.பி.பி. நகரைச் சேர்ந்த சூரியபிரகாஷைத் தேடி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி