மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில், தலைமை பொறியாளர் விஜயகுமார் மற்றும் பொறியாளர்கள் பலர் பங்கேற்றனர். இதில், மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில், 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டப்பணிகளுக்கு, குழாய் பதிக்கும் வகையில், 220 இடங்களில் மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, தனிக்குடிநீர் திட்டம் விடுப்பட்ட பகுதிகளில் மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களில், அடுத்தக் கட்ட பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.