பரமத்தியைச் சோ்ந்தவா் ஜெயபால் (58), வழக்குரைஞா். இவா் கடந்த 15ஆம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூா் கோயிலுக்குச் சென்றிருந்தாா். அப்போது வீட்டின் முன் கதவை உடைத்து வீட்டில் இருந்த ரொக்கம் ரூ. 7 லட்சம், 5 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். பணம், வெள்ளிப் பொருட்களைத் திருடிச்சென்ற மா்ம நபா்கள் குறித்து பரமத்தி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும் பரமத்தி காவல் உதவி ஆய்வாளா் ராதா, வேலூா் உதவி ஆய்வாளா் மோகன் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைத்து மா்ம நபா்களை தீவிரமாக தேடி வருகின்றனா்.