ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே ராஜன்நகர் கிராமத்தில் பலத்த காற்றினால் நேற்று(செப்.1) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கோழி கடை, சலூன் கடை, டீக்கடை ஆகிய மூன்று கடைகளும் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் தீக்காயங்கள் ஏற்படாத நிலையில், கடைகளில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது. இதுபற்றி சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.