ஈரோடு: இரும்பு தூண் மீது மோதி சுமை தூக்கும் தொழிலாளி பலி

கரூர் மாவட்டம் காந்தி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். சுமைதூக்கும் கூலி தொழிலாளி. நேற்று (ஜனவரி 3) இரவு கார்த்திகேயன் கரூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் இருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார். நள்ளிரவு சாவடிப்பாளையம் ரெயில்வே பாலம் அருகே செல்லும்போது அங்கிருந்த இரும்பு தூணில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளுடன் மோதினார். 

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி