மொடக்குறிச்சி அருகே பெண் சடலம் மீட்பு

மொடக்குறிச்சி அடுத்த சாத்தம்பூர் காளிங்கராயன் வாய்க்கால் பகுதியில் பெண் சடலம் இருப்பதாக, அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் பிரேமாவுக்கு தகவல் அளித்தனர். அதன்பின், நேரில் சென்று பார்த்த அவர், மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தண்ணீரில் மிதந்து வந்து ஆகாயத்தாமரையில் சிக்கி கிடந்த, 35 வயது மதிக்கதக்க பெண் சடலத்தை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி