ஈரோடு: சட்டவிரோத மது விற்பனை.. பெண் உள்பட 2 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சின்னமோளப்பாளையத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட கோமதி (40) என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சொந்த பயன்பாட்டிற்காக கர்நாடக மதுவை வாங்கி வந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜூ (51) ஆசனூர் செக்போஸ்ட்டில் கைது செய்யப்பட்டு, 3 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி