சிவ்கிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபானக் கடைகளை ஒட்டியுள்ள பார்களில், விதிகளை மீறி 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாராப்பம்பாளையம்,கந்தசாமி பாளையம் பகுதிகளில் நள்ளிரவு, அதிகாலை நேரங்களிலும் தடையின்றி மது விற்பனை நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மது பாட்டில்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட 30 முதல் 50 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும், பெட்டி பெட்டியாகப் பதுக்கி ரகசிய விற்பனையில் ஈடுபடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.