ஈரோடு மூலப்பட்டறை பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரும் மூர்த்தி மற்றும் செந்தில்குமார் ஆகியோர், சென்னம்பட்டியில் உள்ள ஒரு புளூமெட்டல் நிறுவனத்தில் வங்கி ஏலத்தில் எடுத்த பழைய எந்திரங்களை வாங்குவதாகக் கூறி ரூ. 36 லட்சத்து 30 ஆயிரத்தை மோசடி செய்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். வங்கி ஆவணங்களைக் காட்டி ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர். 13-10-2025 அன்று எந்திரங்களை எடுக்கச் சென்றபோது நிறுவன உரிமையாளர்கள் தடுத்ததால் மோசடி அம்பலமானது.