சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து, ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றிய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும், சவப்பெட்டி கட்டி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.