சிவகிரி: கொலை வழக்கு குற்றவாளிகளை விசாரிக்க தீவிரம்

ஈரோடு மாவட்டம் சிவகிரி, மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்த வயதான தம்பதி ராமசாமி -பாக்கியம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா அடிப்படையில் அரச்சலூரை சேர்ந்த ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் திருட்டு நகையை வாங்கிய சென்னிமலையை சேர்ந்த நகை கடைக்காரர் ஞானசேகரும் கைது செய்யப்பட்டார். 

இவர்கள் அனைவரும் கோவையில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகிய மூவரும் எழுமாத்தூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 6ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட 13இல் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தமிழக முதல்வர் பெருந்துறைக்கு வரும் 11ஆம் தேதி வருகிறார். இதற்கான பாதுகாப்புப் பணி உள்பட பல்வேறு பணிகள் உள்ளன. இதனால் தற்போது காவலில் இருக்கவில்லை. மாறாக 13ஆம் தேதி மூவரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைக்காக காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் சார்பில் மனு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

தொடர்புடைய செய்தி