ஈரோடு: 10 தொகுதிகள் தருபவர்களுக்கே எங்களது ஆதரவு

வேட்டுவ கவுண்டர்கள் சமூக நல கூட்டமைப்பு, வரும் தேர்தலில் 10 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கும் கட்சிகளுக்கே ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தமிழகத்தில் நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் தங்களுக்கு உரிய அரசியல் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும், வல்வில் ஓரிக்கு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி