இந்நிலையில் ராஜ்குமார் மூளை சாவு அடைந்தார். இந்த தகவலை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் ராஜ்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி கல்லீரல், இரு சிறுநீரகங்கள், கண்கள் தானமாக பெறப்பட்டன. பின்னர் ராஜ்குமாரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. ராஜ்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தந்தையும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தாயும், இரு சகோதரிகளும் உள்ளனர். இதன் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15-வது உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு