இதையடுத்து, தீபா அவரது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அன்றைய தினமே ரமேஷ் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தைக் குடித்துவிட்டார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், சிவகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி