ஈரோடு: உழவர் அலுவலர் திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஈரோடு கிழக்கில், தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர் சங்க தலைவர் சாந்தி தலைமையில், உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இத்திட்டத்தில் தோட்டக்கலை அலுவலர் அல்லாதோரை இணைத்து நான்கு வருவாய் கிராமங்களுக்கு ஒரு அலுவலர் நியமிப்பதால், பணியிடங்கள் பாதிக்கப்படுவதாகவும், திட்டத்தின் சிறப்பு குறைவதாகவும் கூறி, இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். இப்போராட்டத்தில் தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி