ஈரோடு: மன்னிப்பு கேட்காததால் தமிழனாக தலை நிமிர்ந்து நிற்கும்.. கமல்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், மொடக்குறிச்சி பா. ஜ. க எம். எல். ஏ சி. கே. சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ஈரோடு பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
பின்னர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சரியான முறையில் விசாரணை செய்து, சரியான முறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, சரியான முறையில் தண்டனையை சீக்கிரமாக பெற்று தந்துள்ளனர். அதை பாராட்ட வேண்டும். அதை விட்டு விட்டு தேவையில்லாததை பேச வேண்டாம் என வேண்டுகோள் விடுகிறேன்.
நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மாட்டேன் என தமிழனாக தலைநிமிர்ந்து நிற்பதால் 25 கோடி ரூபாய் நஷ்டம் சந்தித்துள்ளார். ஒரு வார்த்தை மன்னிப்பு கேட்டு இருந்தால் 25 கோடி ரூபாய் மேல் லாபம் வந்திருக்கும். ஆனால் லாபத்தை பார்க்கவில்லை. தன்மானத்தை பார்த்தார். தமிழை பார்த்தார். தமிழ், அன்பு மன்னிப்பு கேட்காது என்று கமல்ஹாசன் சொல்லிவிட்டார். அமித்ஷா தமிழகம் வருகை குறித்த கேள்விக்கு துக்க விசாரிக்க வந்து இருப்பதால் அரசியல் குறித்து கேள்விகள் வேண்டாம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி