ஈரோடு கருங்கல்பாளையம் மில் வீதியைச் சேர்ந்த 24 வயது சக்திவேல், ராஜாஜிபுரம் குப்பக்காடு பகுதியில் நின்றிருந்தபோது, மதுவிலக்கு போலீசாரால் பிடிக்கப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, போலீசார் அவரை கைது செய்தனர்.