ஈரோடு பகுதியைச் சேர்ந்த கங்கா மற்றும் மேலும் 9 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.11 லட்சத்து 50 ஆயிரத்தை மோசடி செய்த திருப்பூரைச் சேர்ந்த செல்வராஜ் (59) கைது செய்யப்பட்டார். 2014-ல் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, செல்வராஜ் சிறையில் அடைக்கப்பட்டார். பிணையில் வெளிவந்த அவர், கடந்த 8 மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.