ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்கில் வந்த யோகநாதன் என்பவர் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலப்பணிகள் தொடர்பாக எச்சரிக்கை பலகைகள் மற்றும் தடுப்புகள் வைக்காததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.